Thursday 24 September 2015

வழியற்ற வலியல்ல
காதல்

ஷக்தி 
உனதன்பின் நிழல்
நான்

ஷக்தி 
அவ்வளவு எளிதாக இல்லை
இரவும் பகலும்

ஷக்தி 
அது காதலென
நம்ப விரும்புவேன்

ஷக்தி 
கனவுகளை தாளிடுகையில்
நினைவிழக்கிறேன்

ஷக்தி 
அந்திக்கும் கருக்களுக்குமிடையே
தீரா பனிப்போர்

ஷக்தி 
அர்த்தமற்ற காத்திருப்பிள்
கசக்கிறது தேநீரும்

ஷக்தி 
நீரில் தக்கையாய்
என்னுள் நீ

ஷக்தி 
பெற ஆயத்தமாயிருக்கிறேன்
தற நீ

ஷக்தி 
நிறைய பதிலிகளை சொல்லி போகிறாய்
கேள்விக்கு முன்பாகவே

ஷக்தி 
இந்த அந்தியும் நேற்றையொத்திருந்தால்
இன்னும் நல்லது

ஷக்தி 
எஞ்சியிருந்த கடைசி சந்தர்ப்ப
புன்னகையில் காதலிருந்தது

ஷக்தி 
கடந்து போகிறாய் என்
பாலை முகடுகளில் பெருமழை

ஷக்தி 

Thursday 17 September 2015

எப்படி கடந்தாலென்ன

நான் உணர்ந்தேயிருக்கிறேன்
நான் நிறைய சுவாசித்து விட்டேன்
நான் நிறைய காதலை கடந்து விட்டேன்
நான் குளிரேறிய இரவை வெக்கை பகலை கடந்தோடிவிட்டேன்
நிறைய நிலவிருந்தும் இல்லாத இரவுகளையும் அப்படியே 
நான் அடிபழுத்த பயிர் தான்
மூர்கமேறிய காற்று இனி எப்படி கடந்தாலென்ன
-ஷக்தி

....போல.....

சதையுள் புதைந்த
தோட்டாவைப்போல அந்த
பிரிவும் சந்திப்பும்
-ஷக்தி

கைகளில் பிசுபிசுக்கிறது

சகிக்கு சகம் தந்து நிற்கும்
சிவனின் கைகளில்
தகிக்கிறது பாலை
தேவியின் கைகளில் வழியும் நீரூற்று
தாண்டவ பொழுதின் முடிவில் 
தலை தடவிய சிவனின்
கைகளில் பிசுபிசுக்கிறது
கங்கை
-ஷக்தி